பருவமழை சீற்றம் குறைந்ததால், ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு

237

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழையின் சீற்றம் குறைந்தால், ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழையின் சீற்றம் குறைந்ததால், கர்நாடக அணைகளான கபினி, கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 9 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

மேலும் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் விதித்த தடையானது தொடர்ந்து 55வது நாளாக அருவியில் குளிக்கவும், 27வது நாளாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

Advertisement