ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளை காவல்துறை உதவி ஆய்வாளர் சரமாரியாக தாக்கும் காட்சிகள்

665

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகளை காவல்துறை உதவி ஆய்வாளர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த சிலர் குடும்பத்துடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு பரிசலில் பயணம் செய்ய பயணச் சீட்டு வாங்கும் போது லேசான வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது பரிசல் ஒப்பந்ததாரர் கொடுத்த தவறான தகவலின் பேரில், காவல்துறை உதவி ஆய்வாளர் சுற்றுலா பயணிகளை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும் அவர்களை காவல்நிலையத்திற்கு இழுத்து சென்று ஆண்களை அரை நிர்வாணமாகவும், பெண்களை தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

சுற்றுலா பயணிகளை காவல் உதவி ஆய்வாளர் தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of