சென்னையில் பரபரப்பு.. சாலையில் விழுந்த ராட்சஷ பள்ளம்..!

553

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்ததால், பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது.

இந்நிலையில், அரும்பாக்கம் பகுதியில் உள்ள திருவீதி அம்மன் கோவில் தெருவில், திடீரென ராட்சஷ பள்ளம் ஏற்பட்டது. பெரும் சத்தத்துடன் பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்களோ, பொதுமக்களோ கடந்து செல்லாததால், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, அப்பகுதி வழியாக வந்த வாகனங்கள், வேறு பாதைக்கு திருப்பிவிடப்பட்டது.

Advertisement