நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – ஆட்சியர் சுரேஷ்குமார்

308

வங்க கடலில் உருவாகி தமிழகத்தை அச்சுறுத்திக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் கடந்த மாதம் 15-ந் தேதி நள்ளிரவு நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. புயலின் தாக்குதலில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பேரழிவு ஏற்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் புயல் நிவாரண முகாம்கள், சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.