ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா காலமானார்

308

பிரபல ஹாலிவுட் நடிகராக திகழ்ந்தவர் பீட்டர் பாண்டா.  இவர் ’ஈஸி ரைடர்’ படம் மூலம் திரையுலகில் பிரபலமானவர்.  டென்னிஸ் ஹாப்பர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தை தயாரித்தவரும் இவர்தான். peter

இவரது தந்தை ஹென்றி பாண்டாவும் ஹாலிவுட் நடிகராக திகழ்ந்தவர்.  இவர் சிறிது காலமாக புற்றுநோயால் அவதியுற்று வந்தார்.  இந்நிலையில், அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.  அவருக்கு வயது 79.

இது தொடர்பாக மூத்த சகோதரி ஜேன் பாண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் ”நான் மிகுந்த துக்கத்தில் உள்ளேன். என் இனிய சகோதரர் மரணம் அடைந்துவிட்டார்.  இந்த கடைசி நாட்களை நான் அவரோடு கழித்து வந்தேன்.  அவர் சிரித்தவாறே போய் விட்டார்” என கூறியுள்ளார்.

பீட்டர் பாண்டா புற்று நோய் காரணமாக மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of