தெலங்கானாவில் மற்றுமொரு ஆணவக்கொலை

246

தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை பெற்றோரே கொலை செய்து உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் தலமடுகு என்ற கிராமத்தை சேர்ந்த சக்தி அண்ணா என்பவரின் மகள் அனுராதா.

இவர் வேறு சாதி இளைஞரான லட்சுமி ராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் காட்டுப்பகுதியில் ஒரு உடல் எரிக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனுராதா கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர், இதனையடுத்து அனுராதாவின் பெற்றோரை அழைத்து போலீசார் விசாரணை செய்ததில், அனுராதா, வேறு சாதியை சேர்ந்தவரை காதலித்தது திருமணம் செய்து கொண்டதாவும், அதனால் அனுராதாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த பெற்றோர் தாக்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அடி, உதை தாங்க முடியாமல் அனுராதா சனிக்கிழமை இரவு உயிழந்ததாகவும், உடலை சாக்குப்பையில் கட்டி அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்று எரித்து விட்டதாக பெண்ணின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். இதை தொடர்ந்து, முதற்கட்டமாக அனுராதாவின் தந்தை மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.