நாங்களும் போடுவோம்! கவுன் அணிந்து வந்த ஹாலிவுட் நடிகர்!

387

உலக திரையுலகில் ஆஸ்கர் விருது என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும், மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், 91வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்து வருகிறது.

ஆஸ்கர் விழா என்றாலே பிரபலங்கள் அழகு அழகாக உடை அணிந்து வருவார்கள். நடிகைகள் டிசைனர் கவுன்களில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வரும் அழகே அழகு.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் பில்லி போர்டர் டக்சீடோ கவுன் அணிந்து வந்து அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்துவிட்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.