மருத்துவமனையின் இயக்குநர் கொரோனா வைரஸால் பலி

280

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதித்து இதுவரை ஆயிரத்து 900 பேர் பலியாகியுள்ளனர்.

72 ஆயிரம் பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வூஹானில் உள்ள வூசாங் மருத்துவமனையின் இயக்குநர், லியு சிமிங் என்பவர் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணம் அடைந்துள்ளார்.

அவரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளும் பலனளிக்காமல் போய்விட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வைரஸ் தொற்றுக்கு கடந்த வாரத்தில் மட்டும் மருத்துவத் துறையில் பணியாற்றும் 6 பேர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of