இனிமே ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சி!! சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல்!!

172
hosur-and-nagercoil

ஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியும் நகராட்சிகளாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவையில், இந்த நகராட்சி பகுதிகளை மாநகராட்சியாக மாற்றுவதற்கு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதனை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழகத்தில் ஏற்கணவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், தற்போது 2 மாநகராட்சிகள் அதிகரித்துள்ளது.