விடுதி அறையில் தனியாக இருந்த மைதிலி..! கதவை திறந்ததும் அதிர்ந்த மாணவிகள்..!

2200

ஓசூரை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் மைதிலி நீலகுடியில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் விடுதி அறையில் மாணவி மைதிலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் பல்கலைக் கழகப் பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்தனர்.

இது தொடர்பாக மைதிலியின் தோழிகள் மற்றும் பேராசிரியர்களிடம் நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஓசூரில் உள்ள மைதிலியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of