ஓசூர் தொகுதி காலியாக அறிவிப்பு!!

549

ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு, பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில் இந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக சட்டப்பேரவை செயலர் சினிவாசன் அறிவித்துள்ளார்.

எனவே அந்த தொகுதியில், இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of