செல்லாத ஐந்து காசு, பத்துக் காசுக்கு பிரியாணி!!! அலைமோதும் கூட்டம்

236

செல்லாத காசுகளான ஐந்து காசு, பத்துக் காசுக்கு பிரியாணி தருவதாக ஒரு ஹோட்டல் அறிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள ஒரு தனியார் ஹோட்டலில்தான் இப்படி ஒரு ஆஃபர் கொடுத்து அசத்தியுள்ளனர். ஹோட்டலின் முதலாம் ஆண்டு திறப்பு விழாவை முன்னிட்டு வித்தியாசமாக எதையாவது செய்து வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்ட ஹோட்டல் நிர்வாகம் செல்லாத காசுகளான 5 காசு, 10 காசு கொண்டு வந்தால், பிரியாணி வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய நாணயங்களான, 5 காசு, 10 காசுகளை, எங்கிருந்தெல்லாமோ தேடிப்பிடித்து, இன்று பிரியாணி வாங்க ஹோட்டல் முன்பு வந்து குவிந்துவிட்டனர். ஹோட்டல் முன்பாக மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி மகிழ்ச்சியாய் சென்றனர்.

Advertisement