சீட்டு பணம் செலுத்தாததால் வீடு ஜப்தி – நாடு தெருவுக்கு வந்த குடும்பம்

676

திருத்தணி அருகே சீட்டு பணம் செலுத்தாததால் நீதிமன்றம் உத்தரவின்படி வீடு ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கௌரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா என்பவரிடம் சீட்டுப் பணம் கட்டி வந்துள்ளார்.

கௌரி வீட்டுக்கு தெரியாமல் சீட்டு பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார். இந்நிலையில கௌரி இறந்துவிட்டதால், அவரது மகன் ரவியிடம் சாந்தா பணத்தைக் கேட்டுள்ளார். பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்ட ரவியால் உரிய நேரத்தில பணத்தை கொடுக்க முடியவில்லை.

இதைடுத்து சாந்தா திருத்தணி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரவியின் வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்களையும் ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

அதன்படி அவரது வீடு நேற்று ஜப்தி செய்யப்பட்டது. இதனால் ரவி தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் நாடு தெருவுக்கு வந்துள்ளார். அவரது குடும்பத்தினர் சாலையில் அமர்ந்து அழுத காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of