வாடகை கேப்பியா.. வீட்டு உரிமையாளருக்கு நேர்ந்த பரிதாபம்..

386

சென்னை குன்றத்தூரில் குணசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜித் என்ற இளைஞர் வாடகைக்கு குடியிருந்துள்ளார். ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதமாக அஜித் வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே வாடகை பாக்கியை கேட்டதால் வாடகைதாரர், அஜித் இடையே கடும் வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த வாடகைதாரர் அஜித், வீட்டு உரிமையாளரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்தை கைது செய்தனர். வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் கொலை செய்யப்பட்ட செய்தி சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உரிமையாளர் மத்தியில் பெரும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.