அரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா

553

காற்றின் மொழி படத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியாக உள்ள படம் ராட்சசி. அறிமுக இயக்குனர் கவுதம் ராஜ் இயக்கி உள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. பூர்ணிமா பாக்யராஜ், கவிதாபாரதி, மலையாள நடிகர் ஹரீஷ் பேரடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இப்படம் தணிக்கையில் யு சான்று பெற்றுள்ளது. வருகிற ஜூலை 5ம் தேதி படம் வெளியாகிறது. இந்நிலையில் ராட்சசி படத்தின் இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

ஜோதிகா பேசியதாவது : “கடமை தவறும் ஆசிரியர்களுக்கும், கடமை தவறும் அரசுக்கும் பாடமாக இந்த பட கதை அமைந்துள்ளது. இந்த படத்தில் நிறைய கடினமான வசனங்கள் இருந்தன.

முன்னரே முழு கதையையும் கொடுத்துவிட்டதால் அதற்கு தயாரானேன். சில கடினமான வசனங்களை சூர்யாவே சொல்லி கொடுத்தார். புதுமுக இயக்குனர் படங்களில் நடித்தது இல்லை இதுவே முதல் முறை.

இப்போது உள்ள புதியவர்கள் நிறைய விஷயங்களுடன் வருகிறார்கள். அவர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். இந்தப்படத்தின் டிரைலர் வந்த உடன் சாட்டை படம் உள்ளது என்றும், பெண் சமுத்திரகனி என்றும் கூறினார்கள்.

இந்தப்படம் கண்டிப்பாக அதை தழுவி எடுக்கப்பட்டது அல்ல. இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து சமுதாயத்திற்கு முக்கியமானது. சாட்டை, பள்ளிக்கூடம் படங்கள் போன்று இந்தப்படம் இருந்தாலும் இது போன்று இன்னும் நூறு படங்கள் வர வேண்டும். இன்றைக்கு அரசு பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

பாடம் எடுக்க கூட போதிய ஆசிரியர்கள் இல்லை. இப்படி இருக்கும் சூழலில் அவர்கள் எப்படி நீட் தேர்வு எழுத முடியும். இவ்வாறு ஜோதிகா பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of