சேலம் ரயில் கொள்ளை நடந்தது எப்படி?

920

ஓடும் ரயிலில் 5 கோடியே 78 லட்ச ரூபாயை கொள்ளையடித்தது எப்படி என்பது குறித்து கொள்ளை கூட்டக் தலைவன் மோகர் சிங் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

வடமாநில கும்பலைச் சேர்ந்த ஒருவன் சேலத்தில் இருந்ததாகவும், அவன் மூலம் ரயிலில் பணம் வரும் தகவல் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஒரு வாரத்திற்கு மேலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சின்ன சேலம் – விருத்தாசலம் இடையே ரயிலின் கூரையை பிரித்து கொள்ளை அடித்துள்ளனர்.

பேட்டரியால் இயங்க கூடிய கேஸ் கட்டர்களை கொண்டு, ரயிலின் கூரையை, துளையிட்டதாக கொள்ளையர்கள், வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை 6 லுங்கிகளில் சுருட்டிக்கொண்டு, வயலூர் மேம்பாலம் அருகே காத்திருந்த கூட்டாளிகளிடம், வீசியுள்ளனர்.

ரயில் விருந்தாச்சலம் வந்ததும் ரயிலில் இருந்த மற்ற கொள்ளையர்கள் தப்பியுள்ளனர். கொள்ளையடித்த 3 மாதங்களில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், பெரும்பாலான 500 ரூபாய் நோட்டுக்களை அழித்து விட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Advertisement