பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை எப்படி உள்ளது..? வெளியான தகவல்..!

319

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், சுயநினைவின்றி பிரணாப் இருப்பதாகவும், சிகிச்சை அளித்து வரும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்தார். இதனிடையே,பிரணாப் முகர்ஜி காலமானார் என தகவல் வெளியானது.

இதனிடையே, அபிஜித் முகர்ஜி  வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவிலி்ல், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்தார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், சுயநினைவின்றி பிரணாப் இருப்பதாகவும், சிகிச்சை அளித்து வரும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.