வைரஸால் எத்தனை மருத்துவர்கள் பலி..? – ஸ்டாலின் கேள்வி

169

தமிழகத்தில் வைரஸ் தொற்றால், எத்தனை மருத்துவர்கள் இறந்தார்கள் என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பாரா என்று, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், பெருந்தொற்று காலத்தில் தினமும் பல மருத்துவர்கள் உயிரிழந்து வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவர்கள் வைரஸ் தொற்றால் இறந்த செய்தியை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இவர்களில் எத்தனை பேர் தமிழக மருத்துவர்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.