“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..

498

சாதி, மதம், மொழி இவற்றைக் கடந்து அணைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த பண்டிகைக்கு அனைவரும் புத்தாடை உடுத்தி, வாங்கி வைத்த பட்டாசுகள் அனைத்தையும் வெடித்துத் தள்ளுவார்கள்.

இவ்வாறு பட்டாசுகளை தொடர்ந்து வெடித்து வருவதால், ஏற்கனவே மாசடைந்து வரும் நாடு, மிகவும் அசுத்தமானதாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே பட்டாசுகளை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், பொதுமக்கள் தங்கள் இஷ்டப்படி பட்டாசுகளை வெடித்தனர்.

இதனால், போலீசார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வருடமும், இதே போல் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், அனுமதி மீறி பட்டாசு வெடிப்போர் மீது, காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, பல பறவை இனங்களுக்கும் பட்டாசு வெடிப்பதால் தொல்லை ஏற்படுவது என்பது நிதர்சனமான உண்மை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of