சிறையிலுள்ள எத்தனைக் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

411

தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி சரவணன் என்பவருக்கு, ஆறு வாரம் பரோல் கேட்டு அவருடைய மனைவி சங்கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதி கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கைதி சரவணனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக சிறைகளில் இதுவரை எத்தனை கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement