முகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை

2068

தூக்கத்துல இருந்து நேரா எழுந்துபோய் கண்ணாடி முன்னாடி நின்னு பாத்தா முகத்துல ஒரு பெரிய கட்டி…என்னடா இதுன்னு கேட்டா முகப்பருன்னு சொல்றாங்க; இத எப்படி சரி பன்ரதுன்னு டிவிய பாத்து கண்ட கண்ட Creame-லாம் முகத்துல Apply பண்ணி Tired ஆகி ஓரமா முக்காடுபோட்டு உட்கார்ந்து இருக்கீங்களா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்Pimples

என்ன தான் நாம Make-Up போட்டு முகத்த பளிச்சுன்னு காட்ட நினைச்சாலும் இந்த பரு வந்து நம்ம Image-யே Damage ஆக்கிடுதுங்க…ஆமாங்க… இன்னிக்கு நாம முகப்பருவ பத்தி தான் பாக்கப்போறோம்Image-Damage

வாலிப வயதில் வரக்கூடிய இந்த முகப்பரு ஆண், பெண் என்று இருவருக்கும் வருவது சகஜம். இதை சரி செய்ய நினைத்து கண்ட கண்ட Creame-அ முகத்தில் Apply பன்னி இருக்க அழகையும் கெடுத்துக்காமல் முடிந்த அளவுக்கு எந்த பிரச்சனை என்றாலும் இயற்கை முறையில் சரி செய்ய பாருங்கள்.

முகப்பரு எப்படி வருகின்றது :

நம் தோலின் இரண்டாவது அடுக்கில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் இருக்கின்றது. இது Androgen என்று சொல்லக்கூடிய Harmon-னுடைய தூண்டுதலில் Sebum என்ற எண்ணெய் பொருள் சுரக்கின்றது. இந்த Sebum ஆனது நம்முடைய தோலினை மினுமினுப்பாக வைத்துக்கொள்ளும்.Face-layer

இளமை பருவத்தில் Sebum அதிகம் சுரப்பதினால் முகத்தில் எண்ணெய் பசையும் அதிகமாகின்றது. அதனால், நாம் வெளியில் செல்லும்போது மாசு காற்றானது எண்ணெய் பசையில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். இதனால் எண்ணெய் சுரப்பிகளின் வாய்பகுதி மூடிக்கொண்டு தோலுக்கு அடியில் சுறக்கும் Sebum வெளியில் வரமுடியாமல் உள்ளயே இருந்துகொள்ளும். இது போன்று Sebum சேர சேர தோல்லில் வீக்கம் வரும்; அதை தான் முகப்பரு என்று சொல்கிறோம்.

முகப்பரு வருவது எதனால் :

Vitamin குறைபாடு, மது அருந்துதல், மன அழுத்தம், அதிக மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல், புகை பிடித்தல், மாசுபட்ட காற்று, வறுத்த உணவுகள் சாப்பிடுதல், பெண்களுக்கு மாதவிலக்கின்போதும் இந்த முகப்பரு வருகின்றது.

உண்ணக்கூடாதவை :

எண்ணெயில் பொறித்த உணவுகள், பாஸ்தா, வெண்ணெய், Cheese, Coffee, Tea, Ice Cream, Chips வகைகள், பதப்படுத்தப்பட்ட தாணியங்கள், தலையில் பொடுகு அதிகமாக இருப்பதாலும் முகப்பரு வருகின்றது.Foods-Not-To-Eat

உண்ணக்கூடியவை :

Carrot, செரிப்பழம், முட்டை, திராட்சைப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, மாதுழைம்பழம் மற்றும் தர்பூசணிப்பழம்

இதை நீங்க கடைபிடித்தாலே போதும் முகப்பரு இருக்கின்ற இடம் தெரியாமல் போய்விடும்Happy-Face

Advertisement