அவசர பயணத்திற்கு அனுமதி வாங்குவது எப்படி..? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

871

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சைக்காக காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அனுமதி பெற்று ஊருக்கு செல்லலாம் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், அவசர பயணத்திற்காக வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை மாநகராட்சி துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெறலாம் என்று கூறியுள்ளது.