சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி..? நச்சுனு 10 டிப்ஸ்!

1725

நமது உடலில் கழிவுகளை வெளியேற்றி நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் கிட்னியின் பங்கு ஏராளம்… ஆனால் அந்த கிட்னியை நாம் ஆரோக்கியமாக வைக்க வேண்டுமல்லவா? எப்படி என்ற கேள்வி எழுகிறதா? வாருங்கள் பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்….

நவீன மருத்துவ உலகில் இன்று அதிகளவில் பயன்படுத்தப்படும் சொற்களில் டயாலிசிஸ் -உம் ஒன்று. பெரும்பாலும், சிறுநீரக பாதிப்பு நிகழ்ந்திருந்தால் தான் இந்த டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும். ஆனால் இந்த டயாலிசிஸ் சிகிச்சை தற்போது குழந்தைகளுக்கு கூட அளிக்கப்படுகிறது என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

சிறுநீரகம், இரத்தத்தில் உள்ள யூரியா போன்ற நச்சுக்களையும், மேலதிக உப்பு மற்றும் நீரையும் வடிகட்டி சிறுநீராக வெளியேற்ற உதவுகின்றன. இவை பாதிப்படையும் போதுதான் டையாலிசிஸிஸ் செய்வதற்கான தேவை அதிகரிக்கிறது. அதேப்போல சிறுநீரகங்களுக்கு முதல் எதிரிகள் நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு ஆகிய இரண்டு நோய்களும் தான்.

இவைகளை அளவுகளுக்குள் நீங்கள் வைக்காவிட்டால் உங்கள் கிட்னிகள் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் மிக அதிகம்.டயாலிஸிஸ் என்பது சிறுநீரகங்களின் செயலை செய்தாலும் சிறுநீரகங்கள் போலவே சரியாக செயல்படும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இதன் மூலம் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இருந்தாலும் பொருட்செலவு, உடல்நிலை ஒத்துழைப்பு இது போன்ற பல்வேறு விஷயங்கள் இருப்பதால் வரும் முன் காப்பதே சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சிறுநீரகத்தை பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது என்பதை தற்போது பார்க்கலாம்…

சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?

1. சிறுநீர், மலத்தை அடக்க கூடாது

2.தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்த வேண்டும்
நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்

3.புகை, மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்

4. பசி எடுத்தால் மட்டுமே உண்ண வேண்டும்

5.சாப்பாட்டை நன்றாக மென்று உண்ண வேண்டும்

6. ஐயோடின் உப்பை தவிர்க்க வேண்டும். கல் உப்பு, இந்துப்பு ஆகியவற்றை பயன்படுத்தலாம்

7. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட திண்பண்டங்கள், கூல்டிரிங்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்

8. மரபணு மாற்றப்பட்ட காய்கறி, பழங்களை உண்ணக்கூடாது

9. தினசரி 7 மணி நேரமாவது உறங்க வேண்டும்

10. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்துகள் வாங்கி உண்ணக்கூடாது

நமது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும்…எனவே வருமுன் காப்போம் என்பது போல நமது உணவு , பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் இயற்கைக்கு மாறாக கொண்டு செல்லக்கூடாது என்பதும் இங்கு எச்சரிக்கை செய்தியாகவே அமைகிறது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of