“தொப்பையால் தொல்லை.., தீர்வே இல்லை..!” இதோ இருக்கு..!

1149

இந்த தொப்பையால் தொல்லையாக இருக்கிறது. இதற்கு தீர்வே இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று உள்ளுக்குள்ளே அழுதிக்கொண்டு இருக்கிறீர்களா. இது உங்களுக்கான பதிவு. பதிவை முழுவதுமாக படிக்கவும்.

நிறைய பேர் தொப்பை அதிகரித்ததும் ஜிம்முக்கு சென்று தொப்பையை குறைக்க முடிவு செய்வார்கள். ஜிம்முக்கு சென்று சரியான அறிவுரையி;ல்லாமல் உடற்பயிற்சி செய்து, தொப்பை குறையவில்லை என்று புலம்புவார்கள்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் சரியாக உணவுப்பழக்கம் இல்லாததே ஆகும். ஆம், கொழுப்பை குறைக்க நாம் செய்யும் உடற்பயிற்சி வெறும் 25 சதவீதம் மட்டுமே பயன்படுகிறது. ஆனால் 75 சதவீதம் உதவுவது உணவுப்பழக்கமே ஆகும்.

கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை சாப்பிட்டால் கொழுப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அது என்னவென்று தற்போது பார்ப்போம்..,

1. காலையில் டீ, காபி குடிப்பதை தவிர்த்து, சுடுதண்ணீரில் எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

2. பூசணிக்காய், வாழைத்தண்டிற்கு கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகமாகவே உள்ளது. எனவே இவற்றின் சாற்றை வெறும் வயிற்றில் அருந்தினால், கொழுப்பு குறையும் வாய்ப்பு இருக்கிறது.

3. நீர்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழவகைகள்.

4. சாப்பிட்டு முடித்தவுடன் 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தலாம்.

5. டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது. இதனால், சாப்பாட்டின் அளவு தெரியாமல் போய்விடும்.

6. வெங்காயத்தை தினமும் பச்சையாக சாப்பிடவேண்டும். இதன்மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் குறைக்கப்படுகிறது. இதனால் தான் நாம் பிரியாணி போன்ற அதிக கலோரிகள் உள்ள உணவுகளை சாப்பிடும் போது வெங்காயத்தை சேர்த்துக்கொள்கிறோம். நாம் இந்திய உணவுகளில் பெரும்பாலும் வெங்காயம் சேர்த்துக்கொள்வதற்கும் இது தான் காரணம்.

7. அதிக கலோரி உள்ள உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். நொறுக்குத் தீனி ஆசையைத் தடுக்க முடியாவிட்டால், அவல், அரிசிப்பொரி, காய்கறி சாலட் சாப்பிடலாம்.
8. கொழுப்பு குறைவாக இருந்தாளும், ஒரு சிலருக்கு வாயுத் தொல்லைகளால் வயிற்றுப்பகுதி தொப்பை போன்று இருக்கும். இந்த பிரச்சனைகள் இருப்பவர்கள், சோடா சேர்ந்த குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of