ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை! விரிவான தொகுப்பு!

2454

மக்களை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் மாநிலங்களவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது பலருக்கும் தெரியாது. தற்போது எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது குறித்து காணலாம்.

மாநிலங்களவை என்பது பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றாகும். இந்த அவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, பரப்பளவு ஆகியவற்கை பொருத்து ஒரு மாநிலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது.

மாநிலங்களை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றனர். எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்பதற்கு ஒரு சூத்திரம் உள்ளது.

அந்த சூத்திரம்,

ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் / தற்போது காலியாக இருக்கும் ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை +  1. இந்த எண்ணிக்கையை எண் ஒன்றோடு சேர்த்து கூட்ட வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு

தற்போது உள்ள அரசியல் நிலவரங்களை எடுத்துக் கொள்வோம்.

தமிழ்நாட்டின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் – 234

தற்போது தமிழ்நாட்டிற்கு காலியாக இருக்கும் ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை –6

(234/6+1) + 1

(234/7) + 1

(33) + 1

34

தமிழ்நாட்டை பொறுத்தவரை 34 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு ராஜ்ய சபா உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதிமுகவிற்கு 123 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே 3 ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. மீதமுள்ள 21 உறுப்பினர்கள் உபரியாக கருதப்படுவார்கள்.

திமுகவிற்கு 110 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே 3 ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. மீதமுள்ள 8 உறுப்பினர்கள் உபரியாக கருதப்படுவார்கள்.இவ்வாறு ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அரசியல் பற்றியும், தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பற்றியும், ஒரு பிரதிநிதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை பற்றியும் அறிந்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

வலைதள துணை ஆசிரியர் கார்த்திக்குடன் செய்திக்குழு…,