“சிறுமிக்கு எப்படி ஞாபகம் இருக்கும்..” பாலியல் வன்கொடுமை..? நீதிபதி தீர்ப்பால் அதிர்ந்த தாய்..!

825

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு 7 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டதாக சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர், பள்ளியில் பிளம்பராக வேலை பார்த்தவர் ஆவார். இந்த வழக்கு கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், போதிய ஆதாரங்கள் இல்லாததால், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பிளம்பர் மதுசூதனன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு குறித்து பிரபல இணையதளம் ஒன்றிற்கு சிறுமியின் தாயார் பேட்டியளித்துள்ளார்.

அதன்படி, இந்த வழக்கில் பிளம்பர் தரப்பில் வாதாடியவர் பெரிய வக்கில், அவருக்கு ஒரு சாதாரண பிளம்பரால் எப்படி பணம் கொடுக்க முடியும். எனவே இந்த வழக்கில் பள்ளி நிர்வாகமும் தான் ஈடுபட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

மேலும், 7 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம் பற்றி சிறுமியிடம் கேட்டால் எப்படி ஞாபகம் இருக்கும் என்று கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் அவர் சாடினார்.

தொடர்ந்து பேசிய அந்த சிறுமியின் தாயார், இதனால் தான் இந்த மாதிரியான வழக்குகளில் பெற்றோர்களால் தொடர்ந்து போராட முடிவதில்லை. ஆனால் நான் சும்மா விடமாட்டேன் வழக்கை மேல்முறையீடு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.