“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..? அதிர்ச்சி தகவல்..!

2560

ஸ்லேட்டில் எழுதுவதற்கு பயன்படும் பொருள் தான் பல்பம் அல்லது ஸ்லேட் குச்சி. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, ஸ்லேட் குச்சியை உண்ணும் பழக்கத்தை பெரும்பாலும் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெண்கள். பெண்களுக்கு, ஸ்லேட் குச்சி உண்ணும் பழக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.

இந்த பழக்கம் ஏன் ஏற்படுகிறது, இதற்கான காரணம் என்ன, இந்த பழக்கம் எந்த ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதற்கான காரணம் குறித்து தற்போது பார்ப்போம்.

ஸ்லேட் குச்சி சாப்பிடுவது ஏன்..?

பீக்கா என்பது ஒரு வகை சத்துக்குறைபாடு. இந்த குறைபாட்டை கொண்டவர்களுக்கு, ஊட்டச்சத்துகள் அற்ற பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிக அளவில் காணப்படும். இதனாலே, இவர்கள் பல்பம், சிமெண்டு, மண் போன்ற பொருட்களை அதிக அளவில் சாப்பிடுகின்றனர்.

இது தவிர.. ஸ்லேட் குச்சி சாப்பிட தோன்றுவதற்கான வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அந்த காரணங்கள் பின்வருமாறு:-

1. இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி குறைபாடு இருத்தல்.

2. வயிற்றில் பூச்சி தொல்லை இருத்தல்.

3. ரத்தசோகை நோய் இருப்பவர்களுக்கு இந்த தாக்கம் இருக்கும்.

4. பெண்களுக்கு மாதவிலக்கு மற்றும் பிரசவ காலங்களில் அதிகப்படியான ரத்தம் வெளியாவதாலும், பல்பம், மண், சாம்பல் போன்ற பொருட்களை சாப்பிட தோன்றும்.

5. கால்சியம் சத்துக் குறைபாடு மற்றும் தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த பொருட்களை சாப்பிட தோன்றும்.

பல்பம் (ஸ்லேட் குச்சி) சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்:-

ஸ்லேட் குச்சி ஏன் சாப்பிடும் எண்ணம் தோன்றுகிறது என்று முன்னர் பார்த்தோம். தற்போது, அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து காணலாம்.

1. வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படுதல்.

2. மலச்சிக்கல் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுதல்.

3. பல்பம் (சிலேட் குச்சிகள்) போன்ற பொருட்களில் கலந்து உள்ள தூசி நுரையீரலைப் பாதிக்கும் தன்மை கொண்டவை.

4. பல்பத்தை சாப்பிடுவதன் காரணமாக நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.

5. உடலின் தேவைக்கு அதிகமான அளவு சுண்ணாம்புச் சத்து சேருதல்.

6. சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் பாதிப்புகள் ஏற்படுதல்.

7. எலும்புகள் பலவீனம் அடைதல்.

8. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல்.

பல்பம் சாப்பிடும் பழக்கத்தை கைவிட என்ன செய்ய வேண்டும்..?

1. இரும்புச்சத்து அதிகமுள்ள, இறைச்சி, மீன், முட்டை, பேரிச்சப்பழம், முருங்கைக்கீரை போன்ற உணவு பொருட்களை சரி விகிதத்தில் உண்ணுதல்.

2. வைட்டமின் சி உள்ள பழ வகைகளை சாப்பிடுதல்.

3. புரத சத்துக்கள் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிடுதல்.
இந்த வழிமுறைகளை கடைபிடித்தாலே, பெரும்பாலும் பல்பம் சாப்பிடும் எண்ணம் நமக்கு தோன்றுவது குறைந்துவிடும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of