கே.சி பழனிச்சாமி நிலை என்ன? இணைத்தோம் என்று நாங்கள் சொன்னோமா?

532

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி அதிமுகவில் இணைந்ததாக நாங்கள் கூறினோமா? என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் கே.சி.பழனிச்சாமி குறித்து, “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கே.சி.பழனிச்சாமி என்னை சந்தித்தார். முன்னாள் எம்.பி ஒருவர்தலைமை செயலகத்துக்கு வரக்கூடாதா? மரியாதை நிமித்தமாக என்னை சந்திக்க கூடாதா?மேலும்,அவரை கட்சியில் இணைத்து விட்டோம் என்று நாங்கள் கூறினோமா? அல்லது அறிக்கை ஏதேனும் வெளியிட்டோமா? அதுமட்டுமின்றி, கட்சியில் ஒருவர் இணைகிறார் என்றால் அது தலைமை செயலகத்தில் தான் நடைபெறும்” என்று பதில் அளித்தார்.

ஆனால், தலைமை செயலகத்தில் இபிஎஸ் -ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததாகவும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்புவதாகவும் கே.சி பழனிசாமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of