நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு: ஹெச். ராஜா நேரில் ஆஜராக உத்தரவு

413

நீதிமன்றத்தை இழிவாக பேசிய புகாரில் ஹெச். ராஜா நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது உயர்நீதிமன்றம்.

ஹெச். ராஜாவை நான்கு வாரத்திற்குள் ஆஜராகுமாறு சி.டி.செல்வம், மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுமட்டுமின்றி காவல்துறை மற்றும் நீதித்துறையை விமர்சித்தது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஹெச். ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது.