“என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை”: எச்.ராஜா

353
H.Raja

தன்னை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம், நீதிபதி சி.டி.செல்வம் அமர்வுக்கு கிடையாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கடந்த 2 வாரங்களுக்கு முன் காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஹெச்.ராஜா உள்பட 18 பேர் மீது புதுகோட்டை திருமயம் காவல்நிலையத்தில், 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், இவரை கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

ஆனால், இதுவரை ஹெச்.ராஜா கைது செய்யப்படாத நிலையில், கடந்த வாரம் தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக MLA கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

கருணாஸை கைது செய்ய ஆர்வம் காட்டிய காவல்துறை, ஹெச்.ராஜாவை மட்டும் இதுவரை ஏன் கைது செய்யவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும், கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, ஹெச்.ராஜா மீது நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், இதற்கு எதிராக தலைமை நீதிபதி தஹில்ரமணி, துரைசாமி அமர்வு முன் ஹெச்.ராஜாவின் வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார்.

நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வு தன்னிச்சையாக வழக்கு தொடர அதிகாரம் கிடையாது என்றும் தலைமை நீதிபதியால் மட்டுமே, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் எனவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here