ஹூஸ்டன் நகரில் கேட்ட பயங்கர வெடிச்சத்தம் – பீதியில் மக்கள்

244

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள தொழிற்சாலையில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி சத்தம் பல கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதால், அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 4:30 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தால், தொழிற்சாலை முழுவதும் தீ பற்றி கொண்டது. தொடர்ந்து, தொழிற்சாலையின் மேற்கூரை சிதறி, அருகில் இருந்த வீடுகளையும் தேசப்படுத்தியது.

இந்த வெடி விபத்தின் தாக்கம் பல கிலோ மீட்டர் தூரம் வரை உணரப்பட்டதால், அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். மேலும், வெடி விபத்தின் காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும வெளியாகவில்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of