“புகார் அளித்தவர் மீதே புகார்..” அரை நிர்வாணமாக்கி சித்ரவதை..! பெண் உதவி ஆய்வாளர் நிகழ்த்திய கொடூரம்..!

1009

திண்டுக்கல் மாவட்டம் கலைப்பாளையத்தைச் சோந்தவர் மதனகுருசாமி. இவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தான் வசிக்கும் பகுதியில் நடைபெற்று வரும் நூறு நாள் வேலை திட்டத்தின் பொறுப்பாளர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுடன், தன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் என்று தெரிவித்தார்.

மேலும், தன்னை அரைநிர்வாணமாக்கி தாக்கவும் செய்தனர் என்று அந்த மனுவில் மதனகுருசாமி தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், பாதிக்கப்பட்ட மதனகுருசாமிக்கு ரூபாய் 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், அந்த இழப்பீட்டுத்தொகையை காவல் உதவி ஆய்வாளர் வனிதாமணியிடம் இருந்து ரூ.75 ஆயிரத்தையும், தலைமைக் காவலர் மாரீஸ்வரனிடம் இருந்து ரூ.25 ஆயிரத்தையும் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of