“அப்பா வா கடைக்கு போலாம்”- தந்தை இறந்தது கூட தெரியமால் அழுத குழந்தை!

1105

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சேதுராமன் மகன் பாலமுருகன். இவர் டிபன் கடை ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருணா.

இவர்களுக்கு இரண்டு வயதில் நரேஷ்மதன் என்ற ஆண் குழந்தை உள்ளது. வௌ;வேறு சமூகத்தைச் சேர்ந்த பாலமுருகன், அருணா இருவரும் காதலித்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்களது வீடு நீண்ட நேரமாகப் பூட்டிக்கிடந்துள்ளது.

வீட்டின் உள்ளே நரேஷ்மதன் நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்துள்ளான். சிறுவன் நீண்ட நேரமாக அழுதும் தாய் அருணா எதுவும் செய்யாமல் இருந்ததை கண்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவரும் சடலமாக கிடப்பது தெரிந்துள்ளது.

அப்போது அவர்களது மகன் நரேஷ்மதன், அம்மா எந்திரிம்மா. அப்பா என்ன பண்ணுறீங்க. வா கடைக்கு போவோம்’ எனக் கேட்டு அழுதுகொண்டே இருந்திருக்கிறான். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களின் கண்ணில் கண்ணீர் ஏற்படுத்தியது.

அசைவற்று சடலமாகக் கிடக்கும் அம்மாவின் கைகளை இழுத்து எந்திரிம்மா எந்திரிம்மா எனத் தன் பெற்றோர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இருக்கும் போது இப்படி செஞ்சி இருக்க கூடாது என்றும், அந்த குழந்தையை நினைத்துப்பார்க்கும் போது பாவமாக உள்ளது என்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of