கணவன் மனைவி உறவு

1419
Husband-Nd-Wife

பல தம்பதிகள் தங்கள் உறவு பழமையடைவதை விரும்புவதும் இல்லை, அதை விடுவதும் இல்லை. எப்போதும் புத்தம் புதிதாய் இருக்க வேண்டும் என்பதே இதன் காரணம். எப்போதும் புதுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பும்போது, அது புளிப்படைய வாய்ப்பில்லையே.

ஒரு வீட்டில் வசிக்கும் கணவனும், மனைவியும் பார்த்துக்கொள்வது என்பது அன்றாட நிகழ்வுதான் என்றாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தருணங்களில் முதன் முதலாக பார்ப்பது போன்ற பரவசத்தை உணர ஆரம்பிக்கின்றனர்.

பரவசப்படுத்தும் தன்மை உடைய காரியங்கள் மீது நமக்கு சலிப்பு உண்டாக வாய்ப்பில்லை. இது தம்பதிகள் மனதில் நல்லதொரு புரிதலையும், நல்ல அனுபவத்தையும் கொடுக்கிறது.

தனக்கு மனைவியாக போகிறவளை நேசிப்பது ஒரு காதலனுக்கு மதுரமான அனுபவமாக இருக்கிறது. ஆனால் தனக்கு மனைவியாகி விட்டவளைத் திருமணமான புதிதில் நேசித்ததுபோலப் பின் வரும் காலங்களில் நேசிப்பது கசப்பானதாகி விடுகிறது. இந்தச் சூழ்நிலை மிகப் பெரிய ஏமாற்றத்தைப் பெண்களிடத்தில் ஏற்படுத்துகிறது.

திருமணமான புதிதில், பெண்ணின் காலில் குத்தும் முள், கணவனின் இதயத்தில் குத்தியது போல உணர்கிறான். ஆனால், ஆண்டுகள் பல கடந்த பின், அதே பெண்ணின் காலில் முள் குத்தும் போது “பார்த்து வரக் கூடாதோ?” என்று பெண்ணிடம் ஆண் கோபப்படுகிறான். இதனால் பெண்ணானவள் உள்ளம் நொந்து போகிறாள்.

ஆண், அழகைக்காண்கையில் மயங்குகிறான். பெண், அன்பான பேச்சைக் கேட்கையில் மயங்கி விடுகிறாள். இதனால்தான் ஒரு பெண், தான் வருணிக்கப்படுவதை அதிகம் விரும்புகிறாள். இதற்குமாறாக, ஒரு ஆண், தான் வர்ணிக்கத் தேவையான வடிவத்தை அதிகம் விரும்புகிறான். இதற்கு மாறாக நடக்கும் பொழுது குடும்பத்தில் சமாதானக் குறைவு ஏற்பட்டு விடுகிறது.

கணவன்-மனைவி உறவு என்பது, தேயிலைத் தூள் போன்றது, சுடுதண்ணீரில் ஊற்றப்படும் பொழுது தேயிலைத்தூளுக்குள் மறைந்து இருக்கிற தன்மை வெளிப்படுகிறது. இதே போன்றுதான் தம்பதிகள் இருவருக்குள்ளும் மறைந்துள்ள தனித்தன்மையே வெளிக்கொணரும் போது அவர்களின் வாழ்க்கை வலிமையுள்ளதாகவும், சிறப்பானதாகவும் மாறும்.

– ஜாய் ஐசக்

(இனியவளே உனக்காக)

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of