“என்ன வச்சிக்கிட்டே சைட் அடிக்கிறியா” வெளுத்துவாங்கிய மனைவி

605

கடந்த ஞாயிறு அன்று மியாமி பன்னாட்டு விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடத்த நிகழ்வால் 30 நிமிடங்களுக்கு மேலாக அங்கு ஒரு பரபரப்பான சூழல் நிலவியது.

புறப்பட தயாராக இருந்த அந்த விமானத்தில் தீடிரென ஒரு பெண் பயணி சக ஆண் பயணியை தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கினார். உடனயாக அங்கு வந்து விமான பணிப்பெண் அவரை சமாதானம் செய்ய முயன்றபோது அந்த பெண் தகாத வார்த்தைகளால் திட்டியது தனது கணவரை என்பதும் தனது கணவர் தன்னை அருகில் வைத்துக்கொண்டே வேறொரு பெண்ணை பார்த்ததாலேயே இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.

ஒரு கட்டத்தில் உச்ச கட்ட கோபம் அடைந்த அந்த பெண்மணி கையிலிருந்த மடிக்கணினியால் அவரின் கணவரை தாக்க, கணவர் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of