மனைவியை உயிருடன் புதைத்த கணவன்..! அதிர்ச்சி காரணம்..!

1081

கோவா மாநிலம் பனாஜி பகுதியில் வசித்து வருபவர் துக்காராம். கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி தான்வி நீண்டநாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார்.

மனைவிக்கு அடிக்கடி மருத்துவம் பார்ப்பதற்கு துக்காராமிடம் போதிய அளவு பணவசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால், மனைவியை ஒரு தொல்லையாக எண்ணிய துக்காராம், அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதற்காக சதித்திட்டம் தீட்டிய துக்காராம், நர்விம் என்ற கிராமத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் தன் மனைவியை உயிருடன் புதைத்துள்ளார். துக்காராமின் மனைவி காணாமல் போனது குறித்து, அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் துக்காராமிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, துக்காராமை போலீசார் கைது செய்தனர்.

புதைக்கபட்ட துக்காராமின் மனைவி தான்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த கொட்டூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement