கணவனுக்கு வைரஸ் தொற்று.. அதிகரித்த சண்டை.. இறுதியில் பறிபோன 2 உயிர்..

1604

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ராதிகா தம்பதிக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பணி நிமித்தம் காரணமாக, இருவரும் சென்னை மேற்கு மாம்பழம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.

கடந்த சில மாதங்களாகவே, தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதற்கிடையே, மணிகண்டனுக்கு கொரோனா தொற்று ஏற்படவே, சண்டை இன்னும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று விட்டார். அங்கிருந்து மனைவிக்கு நீண்ட நேரம் ஃபோன் செய்துள்ளார். ஆனால், அவரது மனைவி செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.

இதையடுத்து, பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடம் மனைவியை அழைப்பு எடுக்க சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அவர்கள், மணிகண்டன் வீட்டிற்கு சென்றபோது, ராதிகா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வீட்டிற்கு வந்த மணிகண்டன், அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும், கடந்த சில தினங்களாகவே, அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது ராதிகா தற்கொலை செய்து கொண்ட அதே மின்விசிறியில் அதே துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொண்டார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகிய 10 மாதங்களிலேயே, கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.