“தினமும் ரகளை செய்வாள்..” போதை மனைவியால் கண்ணீரில் கணவன்..! குழம்பிய போலீஸ்..!

1324

பொதுவாக, கணவன் மது அருந்திவிட்டு வீட்டில் ரகளை செய்யும் சம்பவங்கள் தான் அரங்கேரும். ஆனால், இங்கே பெண் ஒருவர் மது அருந்திவிட்டு, கணவனை கொடுமைப்படுத்திய சம்பவம் ஒன்று குஜராத்தில் நடைபெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு, தனது மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பது கணவனுக்கு தெரியவில்லை.

இவ்வாறு இருக்க, திருமணமாகிய சில மாதங்களிலேயே மனைவியின் போதைப்பழக்கம் தெரியவந்துள்ளது. மனைவி தினமும் குடித்துவிட்டு, கணவனை கொடுமை செய்து வந்துள்ளார்.

சில சமயங்களில், கணவன் வேலை செய்யும் இடத்திற்கும் வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை சகித்துக்கொள்ளாத அவர், காவல்நிலையத்தில் மனைவி குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தனது மனைவியிடம் இருந்து பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். சொத்தில் பங்கு கேட்டு தனது பெற்றோரையும் கவனித்துக் கொள்ளாமல் இருப்பதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.