2-வது குழந்தை பெற்ற மனைவி..! தலாக் கொடுத்த கணவர்..!

415

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தி அருகே உள்ள ஜனா பஜாரை சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், என் கணவர் அதிக வரதட்சனை கேட்டு என்னை கொடுமைப்படுத்தி வந்தார்.

தற்போது எனக்கு இரண்டாவதாக பிறந்த குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால், கண்டிப்பாக வரதட்சனை வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் எங்களால் வரதட்சனை தரமுடியவில்லை.

இதனால் தலாக் முறையில் கணவர் என்னை விவாகரத்து செய்தார் என அந்த பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of