ஆட்களை வைத்து காதல் திருமணம் செய்த கணவர் கடத்தல் – ஆட்சியரிடம் புகார்

473
perambalur

காதல் திருமணம் செய்த கணவரை கடத்திவிட்டதாகவும், அவரை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் அகரம் கிராமத்தை சேர்ந்த அனிதாவும், பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த முத்துராஜா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு முத்துராஜா வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அனிதா வீட்டார் திருமணத்தை முறைப்படி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடிவு செய்தனர்.

இந்நிலையில் முத்துராஜா அவரது பெற்றோர்கள் ஆட்களை வைத்து கடத்திவிட்டதாக, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனிதா புகார் மனு அளித்துள்ளார்.