சாமியார் ஆசைக்கு இணங்க சொன்ன கணவன்! மறுப்பு தெரிவித்த மனைவி கொலை!

989

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் ராஜ்னியின் சகோதரர். இவர் அப்பகுதி காவல்நிலையத்தில் தனது சகோதரியை, கங்கை நதிக்கரையில் மூழ்கடித்து அவரது கணவர் கொலை செய்துள்ளதாக போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் கங்கை நகரில் சோதனை செய்தனர். அதில், ராஜ்னியின் சடலம் இருப்பது தெரியவந்ததையடுத்து காவல்துறையினர், ராஜ்னியின் கணவரை கைது செய்தனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. நீ உன் மனைவியை என்னுடன் உடலுறவுக்கொள்ள சம்மதித்தால் உன்னை நான் பணக்காரணாக மாற்றுகிறேன் என சாமியார் ஒருவர் ராஜ்னியின் கணவரிடம் கூறியுள்ளான்.

இதனை நம்பிய அவர் தன் மனைவியிடம் அதற்கு சம்மதிக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அவரது மனைவி.

இதனால் ஆவேசம் அடைந்த ராஜ்னியின் கணவர் மான்பால் சிங், பூஜை நடத்த இருப்பதாக கூறி கங்கை கரைக்கு வரச்சொல்லி கொலை செய்துள்ளார். பின்னர், காவல்துறையினர் ராஜ்னியின் கணவரையும், அந்த சாமியாரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of