“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி..! கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..?

760

சேலம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகனேஸ்வரி என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 3 வயதில் சிபு என்ற மகனும் உள்ளான். தம்பதிகள் கோவையில் கடந்த 3 வருடங்களாக வசித்து வந்தனர். அங்கிருந்த போது, கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகள் இருந்துள்ளது. இதன்காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, வீராணம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மோகனேஸ்வரி வந்துள்ளார்.

அங்கு வந்த அவர், சேலத்தில் உள்ள துணிக்கடைஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலைக்கு சென்ற மோகனேஸ்வரி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரது தந்தை மகளை தேடி சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத ஒரு பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வழிப்போக்கர் ஒருவர், மோகனேஸ்வரியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்டு, கொலை நடந்த இடத்திற்கு சென்ற அவர், உயிரிழந்து கிடப்பது தனது மகள் தான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், மோகனேஸ்வரியின் கணவர் கோபி, உறவினர் ஒருவரை சந்திக்க வீராணம் வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அப்போது, தனது மனைவியை மீண்டும் தன்னோடு குடும்பம் நடத்த கணவர் அழைத்ததாகவும், அதற்கு மோகனேஸ்வரி மறுப்பு தெரிவித்ததால், கொலை செய்துள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவரிடம் விசாரணை நடத்த செல்போனில் தொடர்பு கொண்ட போது, ஸ்விட்ச் ஆஃப் என்று வந்ததாகவும், தலைமறைவாக இருக்கும் அவரை கண்டுபிடித்த பிறகே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of