கள்ளக்காதலை கண்டித்த மனைவி..! மனைவியின் உயிரை “துண்டித்த” கணவன்..!

365

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவி திலகம், இவர்களுக்கு சஞ்சய், ஜனனி என ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜெயவேல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரவாயல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திலகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திலகத்தின் முகத்தில் காயம் இருந்ததால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஜெயவேலை விசாரித்தபோது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விராரனையில் ஜெயவேலுக்கு சந்தியா என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்தது தெரியவந்தது.

இதனை மணைவி கண்டித்ததால் கோபம் கொண்ட ஜெயவேல், மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று இருவருக்கும் இடையே, கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஜெயவேல், மனைவி திலகத்தை கடுமையாக தாக்கி, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார். பின்னர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஜெயவேலை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of