கணவருக்கு திருநங்கைகளிடம் தொடர்பு..! மனைவிக்கு டிக்-டாக் மீது மோகம்..! இறுதியில் நேர்ந்த சோகம்..!

907

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்த குமரவேலுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குமரவேலுக்கு, அங்குள்ள திருநங்கைகள் சிலரிடம் தொடர்பு இருந்ததாகவும், ராஜேஸ்வரிக்கு டிக்-டாக் நண்பர்கள் சிலரிடம் தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காதலர் தினமான கடந்த 14-ஆம் தேதி அன்று ராஜேஸ்வரி காலை வெளியே சென்றுவிட்டு, இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.

ஏற்கனவே டிக்-டாக் நண்பர்களுடன் இருந்த தொடர்பின் காரணமாக கோபத்தில் இருந்த குமரவேல், கடந்த 15-ஆம் தேதி அன்று தனது மனைவியிடம் இதுகுறித்து கேட்டு தகராறு செய்துள்ளார்.

மேலும், அன்றைய இரவு தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கியும், அம்மிக்கல்லை தலையில் போட்டும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், தனது 2 குழந்தைகளுடன் அங்கிருந்த தப்பித்த அவர், தனது சொந்த ஊரில் தலைமறைவாகி இருந்தார்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், குமரவேலை அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement