கல்யாணமாகி ஒரு நாள் தான்..! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்..! அதிர்ச்சி காரணம்..!

1478

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரா கிராமத்தை சேர்ந்தவர் பவன். 19 வயதாகும் இவரும், நாகம்மா என்ற பெண்ணும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் பழக்கம் நாளடைவில் இறுக்கமாகி, நாகம்மா கர்ப்பமாகியுள்ளார். இதனையறிந்த இருவீட்டாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த 16-ஆம் தேதி அன்று திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் திருமணமாகிய அடுத்து நாள், பவன், நாகம்மாவை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பவனை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த கருவிற்கு தான் தந்தை இல்லை என்றும், நாகம்மாவை திருமணம் செய்ய தனக்கு விருப்பம் இல்லை என்றும், இதனால் தான் அடித்துக்கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of