2 மனைவிகள் சேர்ந்து எனக்கு கொடுத்தாங்க..! கோவம் வந்துச்சி.., கொன்னுட்டேன்..! திருப்பூரில் பயங்கரம்..!

2197

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோட்டில் கறி கடை நடத்தி வருபவர் ரமேஷ். 35 வயதாகும் இவருக்கு, சாந்தி மற்றும் திலகவதி என்று இரண்டு மனைவிகள் உண்டு. இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

ரமேஷ் தினமும் குடித்துவிட்டு, வீட்டில் உள்ள அவரது இரண்டு மனைவிகளையும் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று நினைத்து மருந்து வாங்கி வந்து, ரமேஷிற்கு சாப்பாட்டில் கலநந்து மனைவிகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை சாப்பிட்ட அவர் மயக்கம் வருது எதைக்கொடுத்தீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று மருந்து கொடுத்தோம் என்று மனைவிகள் கூற, கோபத்தில் இரண்டு பேரையும் உருட்டை கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திலகவதியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடி வரும் நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் வடக்கு போலீசில் சரணடைந்த ரமேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of