கர்பிணி மனைவியை எரித்து கொன்ற வழக்கு – கணவன் கள்ளக் காதலிக்கு ஆயுள் தண்டனை

615

கர்பிணி மனைவியை எரித்து கொன்ற வழக்கில், கணவன் மற்றும் கள்ளக் காதலி உள்பட நான்கு பேருக்கு கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள கல்குண்டு கிராமத்தை சேர்தவர் பாதுஷா. இவரது மனைவி ஹசினா கர்பிணியாக இருந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு எரித்து கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் பாதுஷா, அவரது கள்ளக் காதலி அபினா, மாமனார் பஷிர் சைபு, மாமியார் அம்முலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம், 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தடயத்தை மறைத்த குற்றத்திற்காக தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

Advertisement