கள்ளக்காதலி.. நடுரோட்டில் கணவன் செய்த காரியம்.. கதறிய மனைவி..

1073

ஆந்திர மாநிலம், திருப்பதி சின்னக்காப்பு வீதியை சேர்ந்த சரஸ்வதி என்பவரும், தக்காளி வியபாரம் செய்து வரும் வெங்கடாசலம் என்பவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், வெங்கடாசலத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர், அப்பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதை அறிந்த மனைவி, கணவனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில், வெங்கடாசலத்தையும், அவரது கள்ளக்காதலியையும் காவல் நிலையத்திற்கு அழைத்த போலீசார், அவர்களை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

அப்போது, வெங்கடாசலமும், அவரது கள்ளக்காதலியும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. முன்னதாக, அவரது இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்திய மனைவியை தள்ளிவிட்ட வெங்கடாசலம், தனது குழந்தையின் கதறலையும் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார்.