தோசை மாவில் காதல் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி

934

சென்னை : சுரேஷ் – அனுப்பிரியா தம்பதியினர் 5 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டு புழல் பகுதியில் குடியேறியுள்ளனர். கறிக்கடையில் சுரேஷும் மெடிக்கல் ஷாப்பில் அனுப்பிரியாவும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மனைவி அனுஷியா நீண்ட நேரம் யாருடனோ தொலைபேசியில் பேசுவதால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி தன் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து இரவு சாப்பிடும்போது தோசை மாவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

அதன் பின், தனது ஆண் நண்பரை வீட்டுக்கு வரவழைத்து மயக்கத்தில் உள்ள சுரேஷை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மற்றவர்களிடம் சுரேஷ் குடிபோதையில் தான் இறந்துவிட்டார் எனவும் நாடகமாடியுள்ளார்.

பின்னர் காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அனுப்பிரியாவும் அவரது ஆண் நண்பருமான முரசொலியும் தான் கொலை செய்தனர் என்பது கண்டுபிடுக்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.