கணவனை கொன்று புதைத்து விட்டு, காணவில்லை என நாடகமாடிய மனைவி கள்ளக்காதலனுடன் கைது

198

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்து விட்டு, கணவரை காணவில்லை என்று நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா. வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவர், விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஊருக்கு வந்த தனது கணவரை காணவில்லை என்று அவரது மனைவி போலீஸில் புகார் அளித்தார். இதில் இளையராஜாவின் மனைவி மீது சந்தேகமடைந்த போலீசார், அவரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து, விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, இளையராஜாவின் மனைவி முத்து, தனது கள்ளக்காதலன் மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து, கணவரை தீர்த்து கட்டியது தெரியவந்தது. கணவனை கொன்று புதைத்துவிட்டு, அவரை காணவில்லை என்று நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here